சட்டசபை தேர்தல்: திமுகவுக்கு என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவு
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து இன்று கடிதம் வழங்கினார்.
சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து கட்சிகளுமே கூட்டணி அமைக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன. தனித்து போட்டி என கூறிவந்த அதிமுகவும், நேரத்திற்கு தக்கபடி முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டது.

திமுக ஆரம்பம் முதலே கூட்டணி கதவுகளை திறந்து வைத்துள்ளது. பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றபோதிலும், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட குட்டி கட்சிகள் திமுகவுக்கு தங்கள் ஆதரவு இருப்பதை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து இன்று கடிதம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.தனபாலன், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவோம் என்றார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications