வங்கியைப் பூட்டி பெட்ரோல் குண்டு வீச்சு.. இன்ஸ்பெக்டர் காயம்... கோவில்பட்டியில் பயங்கரம்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வங்கியை வெளியில் பூட்டி வைத்து பெட்ரோல் குண்டு வீசியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே இயங்கி வருகிறது பாரத ஸ்டேட் வங்கியின் கிளை. மாரிமுத்து என்பவர் திடீரென இன்று காலை வங்கியின் அருகே வந்தார். பின்னர், திடீரென வங்கியை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, ஏற்கனவே, தயார் நிலையில் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டை வங்கியின் உள்ளே வீசியுள்ளார்.

மேலும், கையில் இருந்த கத்தியை காட்டி அந்த வங்கியின் ஊழியர்களையும் மிரட்டியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாரிமுத்துவை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் மாரிமுத்து கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, பெட்ரோல் குண்டு வீச்சின் போது அங்கிருந்த போலீசார் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அண்மையில் கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓடும் பேருந்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோவில் பட்டியில் அடுத்தடுத்து நடந்து வரும் துப்பாக்கிச் சூடு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications