தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மர்ம நபர்கள் தப்பியோட்டம்
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை வளாகத்திற்குள் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்த்துகுடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான அந்த ஆலையைச் சுற்றி உள்ள மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் குண்டுகளை வீசிச்சென்றதாக தெரியவந்ததை அடுத்து, அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications