ஈரோட்டில் வணிகர் சங்கத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
ஈரோடு வணிகர் சங்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
ஈரோடு: ஈரோட்டில் வணிகர் சங்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஈரோடு ஈபிபி நகர் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட துணைத் தலைவராகவும் கொங்கலம்மன் கோயில் வீதி வியாபாரிகள் சங்க தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் செல்வத்தின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர். இதில் வீட்டின் முன் பகுதி பால்கனியில் தீப்பற்றி எரிந்ததைக்கண்ட அருகில் வசிப்பவர்கள் தீயை அணைத்தனர். சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் பெட்ரோல் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பாட்டில் துண்டுகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பெட்டோல் குண்டு வீசிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.வணிகர் சங்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications