முழு அடைப்பிற்கு மத்தியிலும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி!
சென்னை: இந்தியா முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
விலை உயர்ந்தது.. இதுமட்டும்தான் பெட்ரோல், டீசல் விலையில்கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டு உள்ளது. ஒரு பைசா கூட கடந்த சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலையில் குறையவில்லை.
ஒரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. தினமும் பைசா கணக்கில் பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

மோடி அரசு
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று பிரதமர் மோடி கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்று சென்னையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

இப்போது என்ன விலை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. டீசல் விலை 23 காசுகள் அதிகரித்துள்ளது.தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98 ஆகும்.

மும்பை மோசம்
மும்பையில் பெட்ரோல் விலை 89.10 ரூபாய்க்கு விற்கிறது. அங்கு விரைவில் ரூ.90 ஆக வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் மும்பையில்தான் மோசமான நிலை நிலவுகிறது. அங்கு விரைவில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய் தொடும்.

போராட்டம் நடக்கிறது
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications