தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு லீவு?
சென்னை: ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அறிவிக்க பெட்ரோலியம் டீலர் அமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பெட்ரோல் டீலர்கள் இதற்கு ஒப்புதலும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Consortium of India Petroleum Dealers அமைப்பின் தலைவர் சத்யநாராயணன் இதுகுறித்து கூறுகையில், எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை அடிப்படையில் மே 14ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் செயல்படாது என தெரிவித்துள்ளார்.

இரு வேறு கருத்துக்கள்
அதேநேரம் அனைத்தந்திய பெட்ரோலிய டீலர் சங்கமோ இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே வாகன ஓட்டிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேற்சொன்ன சங்கத்தில் உறுப்பினராக உள்ள டீலர்கள் பெட்ரோல் பங்குகளை மூடுவார்கள் என கூறப்படுகிறது.

சில மாநிலங்கள்
அனைத்திந்திய பெட்ரோலியம் டீலர் சங்க தலைவர் அஜய் பன்சால் கூறுகையில், Consortium of India Petroleum Dealers அமைப்பு சில மாநிலங்களில்தான் உள்ளது. அந்த மாநிலங்களில் வேண்டுமானால் இந்த புதிய திட்டம் அமலுக்ககு வரும். நாடு தழுவிய அளவில் கிடையாது என கூறியுள்ளார்.

ஆதரவு இல்லை
மேலும் அவர் கூறுகையில், மேற்சொன்ன அமைப்பு தமிழகம், கேரளம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் உள்ளது. நாங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த முடிவு வாகன ஓட்டிகளுக்கு பீதியைத்தான் ஏற்படுத்தும் என்றார்.

கமிஷன் தொகை
சில மீடியாக்களில், கமிஷன் தொகையை உயர்த்தி கேட்டுதான் பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மே 10ம் தேதி எரிபொருள் கொள்முதல் செய்வதில்லை என அவை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications