கார், வேன்களில் டிவிடி பிளேயரை நீக்கக் கோரி வழக்கு... சென்னை உயர்நீதிமன்றத்தில்!
சென்னை: கார்கள், வேன்களில் டிவிடி பிளேயர் பொருத்தப்படுவதை தடை செய்ய வேண்டும். அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுரேஷ் என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கார் மற்றும் வேன் முன்பகுதியில் டிவிடி பிளேயர் பொருத்தப்பட்டு, வாகனத்தில் செல்லும்போதே சினிமாக்களை பார்க்கும் வசதி அதிகரித்துவிட்டது. இது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது.

இதனால் மற்ற வாகனங்களில் செல்வோருக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு, விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் விபத்து குறித்து எந்த புள்ளிவிவரத்தையும் தரவில்லை. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை குறித்து வரும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications