லிங்கா திருட்டு விசிடியை பிடித்துக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு வேண்டுகோள்
லிங்கா படத்தின் திருட்டு விசிடி பற்றிய தகவல் அறிந்தால் உடனே தொடர்பு கொண்டு உதவுமாறு ரஜினி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் லிங்கா படக்குழுவினர்.
ரஜினி நடித்துள்ள 'லிங்கா' படம் கடந்த 12-ந்தேதி ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியைரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே இதன் திருட்டு சி.டி.ககளும் வெளிவந்தன. தமிழகம் முழுவதும் அமோகமாக திருட்டு சி.டி.க்கள் விற்பனையாவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை பர்மா பஜாரிலேயே லிங்கா திருட்டு சி.டி.க்கள் விற்பனையாகின்றன. ஒரு சி.டி.யின் விலை ரூ.100 என நிர்ணயித்து விற்கிறார்கள்.
இந்த சி.டி.க்களை கடைகளுக்குள் ரகசியமாக பதுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்கள். ஆந்திராவிலும் லிங்கா படத்தின் தெலுங்கு சி.டி.க்கள் விற்பனையாகின்றன.
லிங்கா சி.டி.க்களை விற்றதாக ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவரிடம் 41 ஆயிரம் புதுப்பட சி.டி.க்கள் இருந்துள்ளன. அவற்றில் 3000 சி.டி.க்கள் விங்கா பட சி.டி.க்கள் ஆகும்.
திருட்டு சி.டி.யை தடுக்கும்படி ரஜினி ரசிகர்களுக்கு லிங்கா படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படத்தை வாங்கி வெளியிடும் ஈராஸ் இன்டர்ஷேனல் வேந்தர் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், "உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் உரிமம் பெறாத திருட்டு சி.டி.க்கள் தமிழகமெங்கும் சட்ட விரோதமாக வினியோகம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் ரசிக கண்மணிகளாகிய நீங்கள் அவ்வாறு வினியோகம் செய்பவர்களை கண்டுபிடித்து காவல் துறையில் புகார் செய்து ஒப்படைக்குமாறு சட்டப்படி நடவடிக்கை எடுத்து லிங்கா திரைப்படத்தின் வெற்றிக்கு உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.ஒத்துழைப்பு தரும் ஒவ்வொருவரையும் நாங்கள் கவுரவிக்க காத்து இருக்கிறோம்," என்று கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications