முதல்வர் ஜெ.வுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் மத்திய அரசின் உதய் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் இன்று பிற்பகல் பங்கேற்றார்.

பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் திட்டத்தை தமிழக அரசு அப்படியே ஏற்க முன்வரவில்லை. அதில் சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பது குறித்து முதல்வர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது உதய் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மற்ற மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்வது தொடர்பாக பசுமை வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவதில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று பியூஷ் கோயல் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications