திருக்கோவிலூர்: அரசு சேவை இல்லத்தில் பிளஸ் 1 மாணவி துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை
பிளஸ் 1 மாணவி துப்பாட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே பிளஸ் 1 மாணவி ஒருவர் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருக்கோவிலூர் அருகே உள்ள கூடலூர் செம்மண்டலம் பகுதியில் அரசு சேவை இல்லம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அரசு சேவை இல்லத்தில் தங்கி பவித்ரா என்ற மாணவி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். பவித்ராவின் வயது 15. அம்மா- அப்பாவை இழந்தவர் இவர். அதனால் உறவினர்கள் உதவியால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த சேவை இல்லத்தில்தான் படித்து வந்தார். கடந்த மாதம் கோடை விடுமுறையின்போது திருக்கோவிலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் விடுமுறை முடிந்ததும் மீண்டும் பிளஸ் 1 படிப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

ஆனால் சில நாட்களாகவே பவித்ரா கவலையுடனே காணப்பட்டார். யாருமே சரியாக பேசாமல் சோகத்துடனே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பவித்ரா காணாமல் வந்த உடன் படிக்கும் மாணவிகள் தேடி ஆரம்பித்தனர். அப்போது, சேவை இல்லத்தின் பாழடைந்த கட்டிடத்தில் சுடிதார் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியில் அலறினர்.
இதுகுறித்து சேவை இல்ல அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு பின்னர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பவித்ராவின் தற்கொலைக்கான உடனடியாக தெரியவில்லை என்பதால் உறவினர்கள், சேவை இல்ல அதிகாரிகள், ஊழியர்கள், உடன்படிக்கும் மாணவிகளிடம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications