பெற்றோரை அசிங்கமாக பேசிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி +1 மாணவன் புகார்!
நாமக்கல்: நாமக்கல்லில் பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை வேண்டி பிளஸ் 1 மாணவர் ஒருவர் புகார் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மேட்டுக்கடை ஜீவா நகரைச் சேர்ந்த குமரேசன் மகன் சமரன். அவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில், "நான் வெப்படை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறேன்.
கடந்த 12 ஆம் தேதி வகுப்பாசிரியர் பழனிச்சாமி கேட்ட கேள்விக்கு நான் பதில் அளிக்கவில்லை. இதனால், ஆசிரியர் அடித்ததில் எனக்கு கன்னம் வீங்கியது. மாலையில் வீடு திரும்பிய என்னை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மறுநாள் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட பெற்றோருடன் பள்ளிக்குச் சென்றபோது அங்கு தலைமை ஆசிரியர் இல்லை. உதவித் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த வகுப்பு ஆசிரியர் செளந்தரராஜன் என் பெற்றோரை அவமரியாதையாகப் பேசி பள்ளியை விட்டு வெளியேற்றினார்.
மேலும் வகுப்பறைக்குச் சென்ற பிறகு, மாணவர்கள் மத்தியில் வைத்து என்னையும், பெற்றோரையும் தரக்குறைவாகப் பேசினார். இதனால் சக மாணவர்கள் மத்தியில் நான் அவமானப்பட நேர்ந்தது.
என்னை அடித்து அவமானப்படுத்தியதுடன், பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசிய பள்ளி ஆசிரியர்கள் பழனிவேல், செளந்தரராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க இடையூறு இல்லாத சூழலையும் ஆட்சியர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விசாரணை செய்து அறிவுரை வழங்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications