பிளஸ்டூ தேர்வு முடிவு - கணக்குப் புலிகள் 3,882 பேர்.. தாவரவியலில் 15 பேர் மட்டுமே 200க்கு 200
சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு கிடைத்துள்ளது. இதில் மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் தேர்வாகியுள்ளனர்.
பாடவாரியாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.கணிதப் பாடத்தில் 3,882 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.உயிரியலில் 652 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.தமிழ்ப் பாடத்தில் 3 பேர் 198 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இயற்பியலில் 2710 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். வேதியியலில் 1693 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
மிகவும் குறைவாக தாவரவியலில் 15 பேரும், விலங்கியலில் 7 பேரும் முதலிடம் பெற்றுள்ளனர்.
வணிகவியலில் 2581 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.கணக்குப் பதிவியலில் 2403 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.வணிகக் கணிதத்தில் 605 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
போன வருடங்களை விட இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு 97.05% பெற்று முதலிடத்தில் உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் 74.4% பெற்று கடைசி இடத்தில் உள்ளது. நாமக்கல் 96.5%, விருதுநகர் 96.12 %, பெரம்பலூர் 96.12%, ராமநாதபுரம் 93.06%, வேலூர் 85.7%, தஞ்சாவூர் 89.97%, புதுக்கோட்டை 89.7%, தூத்துக்குடி 95.72%, சிவகங்கை 93.4%, தருமபுரி 93.24%, தேனி 92.74%, திருப்பூர் 94% என்ற அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications