For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி... கடந்த ஆண்டைக்காட்டிலும் 1% குறைவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி.

    சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

    விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. இப்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

    91.1% பேர் தேர்ச்சி

    91.1% பேர் தேர்ச்சி

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    1% சதவீதம் குறைவு

    1% சதவீதம் குறைவு

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது.

    விருதுநகர் முதலிடம்

    விருதுநகர் முதலிடம்

    பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

    பதிவு இறக்கம் செய்யலாம்

    பதிவு இறக்கம் செய்யலாம்

    www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்கள்

    செய்தியாளர்கள்

    மேலும் இம்முறை பிளஸ் டூ தேர்வு தொடர்பான புள்ளி விவரங்களையும் இணையத்தில் செய்தியாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Plus 2 results will be announced today morning by 9.30 am. We can see the statistics on the Internet says director of government exams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X