For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்.. 8.98 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்கி உள்ளன. மார்ச் 31 ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தம் 2,472 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள். இது தவிர, தனித்தேர்வர்களாக 20 ஆயிரத்து 448 மாணவர்களும், 11,392 மாணவிகளும், பிற பாலினத்தவர் 3 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

 Plus two exams are starting today

தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைத்து மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்வார்கள். மாவட்ட வாரியாக தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள், 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க பல்வேறு கண்காணிப்பு ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ளது.

 Plus two exams are starting today

மாணவர்கள் செருப்பு, ஷூ, டை அணிந்து வரவும், செல்போன் கொண்டு வரவும் அனுமதி கிடையாது. ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாளிலும் மாணவர்கள் போட்டோ இடம் பெறுகிறது. வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம் பெறுகிறது.

ஹால் டிக்கெட்டிலும், வருகை பதிவேட்டில் உள்ள போட்டோவிலும் வேறுபாடு இருந்தால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மாவட்ட வாரியாக கலெக்டர்கள், எஸ்.பிக்கள், வருவாய்துறையினர் தலைமையில் தேர்வை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில், தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது. தேர்வு அறைக்குள் மாணவர்கள் 9.30 மணிக்கு வர வேண்டும். 10 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்படும். அந்த விடைத்தாளில் மாணவர்களின் புகைப்படம், தேர்வு பதிவெண், தேர்வு எழுத வேண்டிய பாடம், தேர்வு மையம் போன்றவை முகப்பு தாளில் அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்க 5 நிமிடம் மாணவர்கள் எடுத்து கொள்ள வேண்டும். அதை சரிபார்த்த பிறகு மாணவர்கள் முகப்புதாளில் கையொப்பமிட வேண்டும்.

 Plus two exams are starting today

சரியாக 10.05 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். அதை படித்து பார்ப்பதற்கு மாணவர்கள் 10 நிமிடங்கள் வழங்கப்படும். அதைதொடர்ந்து 10.15 மணிக்கு, விடை எழுத தொடங்க வேண்டும். மொழி பாடத்திற்கு கோடிட்ட 38 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் விடைத்தாள் வழங்குவார்கள். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu and pondicherry Plus two exams are starting today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X