வெற்றிக்கு வாழ்த்து... ஆனால்.. நிஜமாகவே மகிழ்ச்சியா பிரதமரே? - பிரகாஷ் ராஜ்
இரு மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்த்து கூறிய அதே நேரத்தில் இந்த வெற்றியால் மகிழ்ச்சி அளிக்கிறதா என்று கேட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: இந்த வெற்றியால் நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இமாசல பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
182 தொகுதிகளில் பாரதிய ஜனதா தற்போது 100 தொகுதிகளில் முன்னிலை பெற்று 6வது முறையாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்கிறது. அதே போல் இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.
|
வெற்றிச் சின்னம்
இரு மாநில வெற்றியை பாஜக தொண்டரகள் கொண்டாடி வருகின்றனர். 11 மணிக்கே வெற்றிச்சின்னத்தை காட்டி மகிழ்ச்சியோடு நாடாளுமன்றத்திற்குள் சென்றார் பிரதமர் மோடி.

நடிகர் பிரகாஷ் ராஜ்
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் கேட்டுள்ளதாவது, அன்பான பிரதமரே, வெற்றி பெற்றதற்கு முதலில் வாழ்த்துக்கள். ஆனால் இந்த வெற்றி குறித்து உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சொன்னது என்னாச்சு?
அன்பிற்குரியவரே, வாழ்த்துக்கள்.. ஆனால் குஜராத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக தாங்கள் கூறியது என்னவானது? நிலைமை இன்னதென்பதை இப்போதாவது அறிந்தீர்களா? இந்த வெற்றி குறித்து உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

நிறைய பிரச்சினை
பிரித்தாளும் அரசியல் என்றுமே வேலைக்கு ஆகாது. பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் மிகப்பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன என்றும் கேட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.

ஏழைகளின் குரல்
மதவாதம், சாதி, துணை குழுக்கள் மிரட்டல், தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக் கொள்ளும் மனப்பான்மை...
கிராமப்புறங்களில் பல முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. இந்திய கிராமங்களில் விவசாயிகள், ஏழைகளின் குரல் மேலும் ஓங்கியிருக்கிறது. அதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications