சட்டசபை தேர்தல்: வேதாரண்யத்தில் நாளை நரேந்திர மோடி பிரசாரம்
நாகப்பட்டினம்: பிரதமர் மோடி நாளை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். இதைத் தொடர்ந்து வேதாரண்யம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வேதரத்தினத்தை ஆதரித்து நாளை மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்காக தேத்தாக்குடி பகுதியில் உள்ள சோதனை சாவடி எதிரே பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும், ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தையும் மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் ஆய்வு செய்தார். மத்திய சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஏ.ஐ.ஜி. ஸ்மித்சிந்தியும் பார்வையிட்டார்.
தஞ்சையிலிருந்து ஹெலிகாப்டர் வந்து இறங்கி ஒத்திகையும் பார்க்கப்பட்டது. மோடி வருகையையொட்டி வேதாரண்யத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் முத்துப்பேட்டை கடல் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. கடல் பகுதியில் அந்நிய படகுகள் நடமாட்டம் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் வருகை குறித்து தெரிவிக்க மீனவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோர கிராமங்களில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications