காவிரி வாரியம் அமைக்க மோடி பயப்படுவது ஏன்?- வைகோ சொல்வதை பாருங்க
கர்நாடகாவில் பாஜக அழிந்துவிடும் என்பதால் வாரியம் அமைக்க பிரதமர் மோடி அஞ்சுகிறார் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

தேனி: கர்நாடகாவில் பாஜக அழிந்துவிடும் என்பதால் வாரியம் அமைக்க பிரதமர் மோடி அஞ்சுகிறார் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தேனியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தமிழ்நாட்டை காவு கொடுக்க அரசு தயாராகிவிட்டது என அவர் குற்றம்சாட்டினார். கர்நாடகாவில் பாஜக அழிந்துவிடும் என்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அஞ்சுகிறார் என்றும் வைகோ கூறினார்.
மேகதாதுவில் கர்நாடக அணை கட்டுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றும் வைகோ குற்றம்சாட்டினார். 2 அணைகளை கட்டி தமிழகத்தை கர்நாடகா அழிக்கப்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவளிக்க வேண்டும் என விக்கிரமராஜா மற்றும் வெள்ளையனுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
