பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி.... மோடியின் நடவடிக்கை மாறுமா?: ப.சிதம்பரம்
சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இனியாவது மாறுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து:
பாரதிய ஜனதாவின் தேர்தல் அணுகு முறைக்கும் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும் கிடைத்த கண்டனமே இந்த தேர்தல் முடிவு. தேர்தல் பிரசாரத்தின் போது எடுத்துக் கொள்ளப்பட்ட விவாதப் பொருளை மக்கள் நிராகரித்து விட்டனர்.

கட்சியிலும் ஆட்சியிலும் முடிவைத் தீர்மானிப்பவர் பிரதமர் மோடி. பா.ஜ.க.வில் அவர் தான் ஒரே தலைவராக காட்சி அளிக்கிறார்.
இந்த தோல்வியால் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்வாரா என்று பார்க்க வேண்டும். மேலும் இத் தேர்தலில் காங்கிரசின் நிலைப்பாட்டை துணைத் தலைவர் ராகுல்காந்தி தீர்மானித்தார். இதன் மூலம் அவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கும் நேரம் வந்து விட்டது.
பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என உடனே கூறிவிட முடியாது. ஆனால் பாரதிய ஜனதா அல்லாத கட்சிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது இந்த தேர்தல்.
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications