20 தமிழர் படுகொலை விவகாரம்.. பிரதமர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்! - சொல்கிறார் பொன் ராதா!
சென்னை: ஆந்திர போலீசால் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வி.டி.எம்.எஸ். எனும் புதிய சேவையை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி முடிவில், பொன்.ராதாகிருஷ்ணனிடம், திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிப்பது ஏன்?," என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், "ஆந்திர மாநிலம் திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனையான, கண்டனத்துக்குரிய செயலாகும். இதுகுறித்து மத்திய அரசு நிச்சயம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவில்லை. நேரம் வரும்போது நிச்சயம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார். தகுந்த நடவடிக்கை எடுப்பார்.
தற்போதுள்ள நிலையில் ஆந்திர அரசு தான் விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், இதுபோன்ற ஒரு வன்முறை சம்பவத்தை தடுக்கவே முடியாது. தமிழகத்தில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்த தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து அனுப்பும் ஏஜெண்டுகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications