பொங்கலுக்குப் பின் பாமக வேட்பாளர் பட்டியல்- அன்புமணி ராமதாஸ்
சேலம்: பொங்கல் பண்டிகைக்கு பிறகு பாமக வேட்பாளர்கள் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்படும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாமகவில் இணையும் விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், பா.ம.கவை குறைகூற முடியாத சிலர் ஜாதி கட்சி என்ற வதந்தியை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக பா.ம.க தலித் மக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று கூறிய அன்புமணி, ஜாதி பெயரால் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அமைப்புகளை மட்டுமே பா.ம.க எதிர்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த காலத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்ததற்கு மன்னிப்பு கோரிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.
தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பலர் பா.ம.க.வில் இணைந்தனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பா.ம.க.வின் வேட்பாளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவித்த அன்புமணி ராமதாஸ், இதில் 50 சதவீதம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இடம்பெறுவர் என்றார். தமிழகத்தில் ஊழல் அமைச்சர்கள், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சிறை செல்வது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications