விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை பாமக வேட்பாளர் மாற்றம்- வக்கீல் பாலு போட்டி!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளர் ராமமூர்த்தி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
2006 சட்டசபை தேர்தலில் விருத்தாசலம், 2011-ல் ரிஷிவந்தியம் தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார் விஜயகாந்த். தற்போது உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் திமுகவின் வசந்தவேலு, அதிமுகவின் குமரகுரு ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். பாமகவும் ராமமூர்த்தி என்ற வேட்பாளரை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பாலுவை உளுந்தூர்பேட்டை வேட்பாளராக அறிவித்துள்ளது பாமக. இது குறித்து வழக்கறிஞர் பாலு கூறுகையில், 2006-ல் சினிமா மாயையால் விருத்தாசலத்திலும் 2011-ல் அதிமுகவின் தயவால் ரிஷிவந்தியத்திலும் வென்றவர் விஜயகாந்த்.
இம்முறை அவரால் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வெல்ல முடியாது என்பது அவரது கட்சியினருக்கே தெரிந்த விஷயம். உளுந்தூர்பேட்டை தொகுதி மக்கள் நிச்சயம் என்னை அவர்களது பிரதிநிதியாக ஏற்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications