For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக கண்டிப்பாக வரும், தேமுதிகவும் வரும் அறிகுறிகள் தென்படுகிறது.. இல.கணேசன்

Google Oneindia Tamil News

PMK and DMDK will come to our alliance, asserts Ila Ganesan
சென்னை: தேமுதிகவுடன் 2 முறை பேசி விட்டோம். எங்களுடன், எங்களுடைய கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன என்று பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

எங்கள் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. விஜயகாந்துடன் இரண்டு முறை பேசியாகிவிட்டது. எங்கள் கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவதற்கான சாதகமான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது.

பாஜக கூட்டணியில் இடம்பெற பாமக ஏற்கனவே தயாராகிவிட்டது. மதிமுக, ஐஜேகே ஆகிய கட்சிகள் எங்கள் அணியில் இடம் பெற அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளன. எனவே தமிழகத்தில் பலமான கூட்டணி அமைவது உறுதி.

அடுத்த மாதம் 8-ந்தேதி நரேந்திரமோடி சென்னை வருகிறார். அந்த கூட்டத்துக்கு முன்பாக பா.ஜ.க கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் உறுதியாகிவிடும் என்றார் கணேசன்.

அவர் சொல்வதைப் பார்த்தால் விஜயகாந்த்தை தலைவராக ஏற்றுக் கொள்ள பாமக தயாராகி விட்டதோ என்று கருதத் தோன்றுகிறது. அப்படி ஒரு வேளை விஜயகாந்த்தை தலைவராக ஏற்று, தேமுதிகவையும் ஒரு கட்சியாக ஏற்க பாமக முடிவு செய்தால், பாஜக தலைமையிலான கூட்டணி நிச்சயம், திமுக, அதிமுகவுக்கு பெரும் இடையூறாக அமையும் என்பது உறுதி. வாக்குகள் பிரிந்து யாருக்குமே பெரிய அளவில் சீட் கிடைக்காத நிலை ஏற்படலாம்.

English summary
BJP senior leader Ila Ganesan has asserted that both DMDK and PMK will join their alliance to face the LS polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X