சென்னை மருத்துவ கல்லூரியில் '1960' மாணவர்கள் “ரீயூனியன் மீட்”- நண்பர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ்
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில் கடந்த 1960 ஆம் ஆண்டில் மருத்துவம் படித்த மாணவர்களின் மறு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி மகிழ்ந்தார்.
சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவரும், மயக்க மருந்துத்துறை மருத்துவருமான பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.

காலை 9.30 மணிக்கு, சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவரும், பா.ம.க நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் கோட் சூட் அணிந்தபடி வந்தார். அவரை முன்னாள் மாணவர்கள் சூழ்ந்து கொண்டனர். 50 வருடங்களுக்கு முன்பு தங்களுடன் படித்தவர்களை பார்க்கும் ஆவலில் டாக்டர் ராமதாஸ் இருந்தார். அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்து, கட்டிடத்துக்குள் சென்றார்.
முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்பட்டது. அந்த கையேட்டில் 1960 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் எடுத்த "குரூப் போட்டோ" இடம் பெற்றிருந்தது.
சந்திப்பிற்கு பின் பேட்டியளித்த அவர், "முன்னாள் மாணவர் சந்திப்பு என்பது மிகவும் உற்சாகமான தருணம். எங்களுடன் படித்த சிலர் இப்போது உயிருடன் இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. இங்கு அனைவரும் நலமாக நல்ல நிலையில் உள்ளார்கள் என்று பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்திப்பில் எங்களது பழைய நினைவுகள், சாகசங்கள், வீரதீர பராக்கிரம செயல்களை எண்ணி, எங்களுக்குள்ளேயே கிண்டலடித்து மகிழ்ச்சி அடைந்தோம்.
இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு மனதார நன்றி கூறுகிறேன். வெளிநாடுகளிலும் நடந்த மாணவர் சந்திப்புக்கு நான் போகாவிட்டாலும், நலம் விசாரித்திருக்கிறேன். எம்.எம்.சியில் படிப்பது பெருமை என்று மார்தட்டி நாங்கள் சொல்லிய காலங்களும் உண்டு. படிக்கும்போதே திருமணம் செய்த கொண்டவர்களில் நானும் ஒருவன். கல்லூரி நினைவுகளை என்றுமே நான் மறப்பது இல்லை" என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தன்னுடன் படித்த மாணவர்கள் அனைவருக்கும் லேப் டாப் பேக்கினை நினைவு பரிசாக டாக்டர் ராமதாஸ் வழங்கி மகிழ்ந்தார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications