பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்- நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற சாப்ட்வேர் என்ஜினியர் ஜூன் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். காதலிக்க மறுத்ததற்காக விழுப்புரத்தில் நவீனா என்ற ஏழை மாணவி தீ வைக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை தடுக்கப்பட வேண்டும், பெண்கள் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் வாழ்வதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. உடன்படிக்கைகள் வலியுறுத்துகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை டாக்டர் ராமதாஸ் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர்
டிவியில் அக்கப் போர்
பாமகவின் போராட்ட செய்தியை வெளியிட்ட சன் நியூஸ், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக கூறியது. ஆனால் புதிய தலைமுறையோ இப்படி ஒரு நிகழ்வே சென்னையில் நடந்ததாக போடவே இல்லை.
ஏற்கனவே புதிய தலைமுறை நிறுவனர் பச்சமுத்துவுக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்த மோதலில் டாக்டர் ராமதாஸை சன் நியூஸ் ஆதரித்து முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகிறது.
இதற்கு பதிலடியாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீதான வழக்குகளை இடைவிடாமல் போட்டு ஒளிபரப்புகிறது புதிய தலைமுறை. தற்போது ராமதாஸ் போராட்டத்திலும் இந்த அக்கப்போர் எதிரொலித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications