வேண்டா வெறுப்பாக கூட்டணியில் சேர்ந்து ஒரு இடத்தில் மட்டும் வெல்லும் பாமக!
சென்னை: தேமுதிகவுக்கு பாமக பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு லோக்சபா தேர்தலில் தர்மபுரியில் வெல்லும் நிலையில் உள்ளது பாமக.
தேமுதிகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலையில், பாமகவால் ஒரு இடத்திலாவது வெல்ல முடிந்தது அக்கட்சியினரை உண்மையிலேயே ஆறுதல்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் வட மாவட்டங்களில் தாங்கள்தான் செல்வாக்கானவர்கள் என்பதையும் மறைமுகமாக நிரூபித்துள்ளது பாமக.

குறைந்த வாய்ச்சவடால்
தேமுதிகவைப் போல வாய்ச் சவடால் அதிகம் பேசாத கட்சி பாமக என்றாலும் வேண்டா வெறப்பாக, வேறு வழியில்லாமல்தான் பாஜக கூட்டணிக்கு வந்தது.

வந்த இடத்தில் தேடிவந்த அவமானங்கள்
வந்த இடத்தில் அதை தேமுதிக பல ரூபங்களில் அவமானப்படுத்தியது. இதனால் கூட்டணியை விட்டு வெளியேறும் மனோ நிலைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தள்ளப்பட்டபோதும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்தான் கட்டாயப்படுத்தி, தாஜா செய்து ராமதாஸை அமைதிப்படுத்தினார்.

8 இடங்களில் போட்டி
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. அதில் அக்கட்சிக்கு தற்போது தர்மபுரியில் மட்டுமே வெற்றி கிடைக்கிறது.

தேமுதிகவுக்காக தாரை வார்த்து
தேமுதிகவுக்காக சேலம் உள்ளிட்ட சில முக்கியத் தொகுதிகளை தாரை வார்த்துக் கொடுத்தது பாமக. அங்கெல்லாம் தற்போது தேமுதிக மண்ணைக் கவ்வியுள்ளதால், பாமகவினர் கைங்கர்யம் அதில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தனித்து நின்றால் போண்டிதான்
தனித்து நின்றால் இந்த வெற்றி கூட கிடைத்திருக்காது பாமகவுக்கு. மாறாக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் ஒரு இடமாவது அதற்குக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிகவை வென்றது ஆறுதலே
ஒரு இடத்தில் மட்டுமே பாமகவுக்கு வெற்றி கிடைத்தாலும் கூட அது மத்திய அமைச்சர் பதவியாக மாறக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பாமகவுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சி தருவதே ஆகும்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications