3வது இடத்தைப் பிடித்த பாமக.. !
சென்னை; தமிழக சட்டசபை தேர்தலில் தற்போதைய நிலவரத்தின் படி 5 தொகுதிகளில் பாமக முன்னிலை வகிப்பதன் மூலம், அந்த கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணப்படு வருகின்றன. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின.

12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் அதிமுக முதலிடத்திலும், திமுக இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், பாமக 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேசமயம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாமக ஒரு சக்தியாக உருவெடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம் வட மாவட்டங்களில் தேமுதிகவின் ஆதிக்கத்தை பாமக மீண்டும் தகர்த்து தக்க வைத்துள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications