இடஒதுக்கீட்டுக்காக தியாகம் செய்தது பாமகதான்; கையெழுத்து மட்டுமே திமுக- ராமதாஸ் பேட்டி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்காக தியாகம் செய்தது பாமக மட்டுமே. அதில் திமுகவுக்கு துளிக்கூட பங்கு இல்லை என்று பாமக நிறுவன ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே பாமகவின் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், பாமகவுக்கு வாக்களிக்க மக்கள் இப்போதே தயாராக இருக்கிறார்கள். எனவே அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வர் ஆவது உறுதி என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் பாமகவைச் சேர்ந்த 7 பேர் உயிரை தியாகம் செய்து அந்த உரிமையை பெற்றிருக்கிறார்கள். கையெழுத்துப் போட்டதை தவிர ஆட்சியில் இருந்த திமுகவுக்கு வேறு எந்த பங்கும் இல்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications