அன்புமணி தலைமையில் நாளை 5000 பெண்கள் பங்கேற்கும் மதுஒழிப்பு போராட்டம்
சென்னை: பாமக முதல்வர் வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை சென்னையில் சுமார் 5000 பெண்கள் பங்கேற்கும் மதுஒழிப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து மதுஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறது பாமக. வருகிற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் தங்களது முதல் கையெழுத்து மது விலக்கை அமுல் படுத்துவதாகத் தான் இருக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக பாமக மகளிர் அணி சார்பில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் மது ஒழிப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார். சுவாமி அக்னிவேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, துணைத் தலைவர் கே.என். சேகர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இது தொடர்பாக ஏ.கே.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல், மொழி, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டு மக்களை சிதைத்து வருவது மது. எனவே மதுவை ஒழிக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் அணிதிரண்டு வந்து ஆதரவு தரவேண்டும். மது ஒழிக்கப்படும்வரை பா.ம.க. போராடும்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications