சென்னை மெரீனா கடலில் படகுப் போக்குவரத்து!

Subscribe to Oneindia Tamil

60. தமிழகத்தில் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு அதன் ஒப்பந்ததாரர்களே பொறுப்பேற்க வேண்டும். சாலைகள் தரம் குறைவாக இருந்து, சேதமடைந்தால் அதற்கான இழப்பீடு ஒப்பந்ததாரரிடமிருந்து வசூலிக்கப்படும்.

61. பேரூந்துகளில் எரிபொருள் சிக்கனம், சிறப்பான பராமரிப்பு, நிர்வாக சீர்திருத்தம், வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அரசுப் போக்குவரக்கழகங்கள் இலாபத்தில் இயங்கும் நிலை ஏற்படுத்தப்படும்.

62. சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் (மெட்ரோ ரயில் திட்டம்) இரண்டாம்கட்டமாக ஆலந்தூர் முதல் விமானநிலையம் வரையிலான 5.1 கி.மீ. நீளப்பாதையில் ஆகஸ்ட் 15ம் தேதி போக்குவரத்து தொடங்கப்படும்.

PMK releases shadow budget 2016-17

63. சென்னை எழும்பூர் & திருமங்கலம் இடையிலான சுரங்கப்பாதையில் பெருநகர தொடர்வண்டித் திட்ட சேவைக்கான வெள்ளோட்டம் அடுத்த வாரம் தொடங்கப்பபடும். சோதனை ஓட்டம் முடிவடைந்தபின், அப்பாதையிலும் போக்குவரத்துத் தொடங்கப்படும்.

64. 2017 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்குள் மொத்தம் 45 கி.மீ. நீளமுள்ள சென்னைப் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் இருபாதைகளிலும் முழு அளவில் போக்குவரத்து தொடங்கப்படும். இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

65. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவை கோயம்பேடு வரை விரிவுபடுத்தப்படும்.

66. சென்னையில் கலங்கரை விளக்கம் முதல், சாத்தியமாகக்கூடிய தொலைவு வரை கடலில் படகுப் போக்குவரத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும்.

67. தமிழகத்தில் நிலுவையிலுள்ள தொடர்வண்டித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வசதியாக, அத்திட்டங்களுக்கான செலவில் 50 விழுக்காட்டை மாநில அரசு வழங்கும்.

68. அடுத்த 3 ஆண்டுகளில் 6220 மெகாவாட் மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

69. அடுத்த 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் மின்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

70. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மின் தேவையில் 50 விழுக்காடு சூரியஒளி மின்திட்டம் மூலம் பெறப்படவேண்டும்.

71. காற்றாலைகளை மாற்றி அதிக மின்சாரம் உற்பத்தி செய்தல், கலப்பின மின் உற்பத்தி தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திச் செய்யப்படும்.

72. தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் மின்வாரியத்தின் வருவாயைப் பெருக்கி லாபத்தில் இயங்கும் நிலை உருவாக்கப்படும்.

73. மின்வாரியத்தை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் மின்வாரியத்தின் கடன் படிப்படியாக அடைக்கப்படும்.

74. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிக்கு தமிழக அரசு உதவும். இதற்கான நிதி ரூ.40 கோடியை தமிழக அரசே வழங்கும்.

75. தமிழ்நாட்டில் தமிழ் மொழி ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு, தமிழ் மொழி வளர்ச்சிக்கான ஆய்வுப்பணிகள் ஊக்குவிக்கப்படும்.

76. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயைத் தடுக்க சுகாதாரம் பேணப்படுவது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

77. சுகாதாரம் மற்றும் துப்புரவை பராமரிப்பதற்கான அனைத்தும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

78. தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 2015-&2016 ஆம் ஆண்டில் 1,750 ஆக உயர்த்தப்படும்.

79. விழுப்புரத்தில் அடுத்த ஆண்டு சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

80. பன்றிக் காய்ச்சலுக்கான ஆய்வு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும். சிகிச்சைத் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

81. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் வாரத்திற்கு இரண்டு பாடவேளை நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்படும்.

82. பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் மரபு சார்ந்த தற்காப்புக் கலைகள் கற்றுத்தரப்படும்.

83. அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 73 ஆவது திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். 29 துறைகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும்.

84. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான 50% இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

85. நகர்ப்புற நிர்வாக முறையின் அனைத்து முக்கிய அம்சங்களும் நகராட்சி நிர்வாகத்தின் அங்கங்களாக்கப்படும்.

86. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய தண்ணீர் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.

87. தண்ணீர் உரிமைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு குடிநீருக்காக எவரும் ஒரு காசு கூட செலவிடத் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

88. எவரேனும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உருவானால், அதை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் குடிநீருக்காக செலவிட்டதைப் போன்று 10 மடங்குத் தொகை அவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+