பெண்களுக்கு எதிரான குற்றத்தைத் தடுக்க தமிழக காவல்துறையில் தனி பிரிவு!

Subscribe to Oneindia Tamil

37. தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். இதற்காக சட்ட வல்லுனர்கள், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் தமிழக முதலமைச்சர் தலைமையிலான குழு பேச்சு நடத்தும்.

38. தமிழக அரசின் ஆண்டுத்திட்டம் ரூ. 55,000 கோடியாக இருக்கும்; இதில் வேளாண்துறை திட்டங்களுக்கான ஒதுக்கீடு மட்டும் ரூ.16,005 கோடி.

PMK releases shadow budget 2016-17

39. தமிழக அரசின் நேரடிக்கடன் சுமையும், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையும் ரூ. 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இந்தக் கடன்சுமையை 5 ஆண்டுகளில் போக்குவதற்கான சிறப்புத்திட்டத்தை பா.ம.க. வகுத்திருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

- தமிழக அரசுக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளை அரசே நடத்துவது மற்றும் போட்டி ஏலமுறையில் தனியாருக்கு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.22,000 கோடி வருவாய் கிடைக்க வகை செய்யப்படும்.
- தாது மணல் குவாரிகளை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.55,000 கோடி வருவாய் கிடைக்க வகை செய்யப்படும்.
- ஆற்று மணல் விற்பனை முறைப்படுத்தப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.18,000 கோடி கூடுதல் வருமானம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- வணிக வரி வசூலில் காணப்படும் குறைகள் களையப்பட்டு ஆண்டுக்கு ரூ.22,000 கோடி கூடுதல் வரி வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- மேற்குறிப்பிட்ட 4 வகை நடவடிக்கைகளின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,17,000 கோடி வருவாய் கிடைக்கும். முழுமையான மது விலக்கு நடைமுறைப் படுத்தப்படுவதால் அரசின் வருவாய் ரூ.25,000 கோடி அளவுக்கு குறையும். இதைக் கருத்தில் கொண்டால், தமிழக அரசுக்கு ரூ. 92,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இதில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி அரசின் கடனை அடைக்க செலவிடப்படும்.

40. காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.

41. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் தலைமை இயக்குனராக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்.

42. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் மறுசீரமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

43. தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஒற்றைச்சாளர முறையில் 3 வாரங்களில் வழங்கப்படும். ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவ முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

44. தொழில் முதலீடு செய்பவர்களை சந்தித்து பேச முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.

45. தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஒரு பொருளாதார ஆணையரகமாக செயல்படும்.

46. ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையராக செயல்படுவார்.

47. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் இளைஞர்களில் சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்காக சுயதொழில் முதலீட்டுக் கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும்.

48. தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கும் நோக்குடன் சிறப்புத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

49. இத்திட்டத்தின்படி தமிழகத்தை சர்வதேச தளவாடக் கிடங்கு மையமாக மாற்றுதல், சுற்றுலா மற்றும் மென்பொருள் சார்ந்த சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

50. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். 1.1.2016 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப் படும் இந்த பரிந்துரைகள் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரே கட்டமாக வழங்கப்படும்.

51. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அவர்களுக்கான அனைத்து ஓய்வூதியப் பயன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

52. புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.

53. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் படித்த இளைய தலைமுறைக்கு அரசு வேலை வழங்கப்படும்.

54. அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும்.

55. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

56. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஓய்வூதியப் பயன்கள் உடனடியாக வழங்கப்படும்.

57. காவிரி பாசன மாவட்டங்களில் பாறை எரிவளி திட்டத்திற்கும், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய்ப் பாதை அமைக்கும் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படாது.

58. எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 42&ம், பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.32&ம் கொள்முதல் விலையாக வழங்கப்படும்.

59. இலங்கைப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்டவுடன் அவற்றை சீரமைப்பதற்குத் தேவையான முழுத் தொகையையும் அரசே மானியமாக வழங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+