மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் நிறுவப்படும்

Subscribe to Oneindia Tamil

17. அனைத்து மாவட்டங்களிலும் முறையே ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு பொறியியல் கல்லூரியும் அமைக்கப்படுவது உறுதி செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டில் கடலூர், கரூர், அரியலூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் 2017&18 ஆம் ஆண்டில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

18. தமிழ்நாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 50 விழுக்காடு இடங்களை மாநில ஒதுக்கீடாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

19. 2016 - 2017 ஆம் ஆண்டில் உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12,500 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

PMK releases shadow budget 2016-17

புதிய கல்வி நிறுவனங்கள்

20. சென்னைப் பல்கலைக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் திறன்சார் அறிவு மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

21. தமிழகத்தில் 6 ஒருமைப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். ஆராய்ச்சிகளைச் செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

22. சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் வலியுறுத்தி, ஓராண்டிற்குள் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.

23. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி.க்கு இணையான ஓர் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

24. ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சட்டக்கல்லூரியும், ஒரு வேளாண் கல்லூரியும் அமைக்கப்படும்.

25. அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக 2017&18ஆம் ஆண்டில் 10 மாவட்டங்களில் மகளிர் கல்லூரிகள் தொடங்கப்படும்.

26. வேளாண்மைக்குத் தேவையான தரமான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

27. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் தடையின்றி பயிர்க்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நடப்பாண்டில் ரூ.8,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

28. விவசாய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும். இதை விவசாயிகள் உழவுப் பணிகளுக்காக கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

29. நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவில் 50 விழுக்காடு மானியமாக வழங்கப்படும்.

உழவர்கள் தற்கொலை தடுப்புத் திட்டம்

30. உழவர்கள் தற்கொலையை தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்கள்:

1. வேளாண் விளைப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேளாண் விலை நிர்ணய வாரியம் ஏற்படுத்தப்படும். அதன்மூலம் உற்பத்திச் செலவுடன் 50 விழுக்காடு லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
2. உழவர் ஊதியக்குழு அமைத்து, அக்குழுவின் வழியாக வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை, வேளாண்மையில் ஈடுபடுவோருக்கு நேரடி ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
3. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத்தொகை முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்குள் பெற்றுத்தரப்படும்.
4. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் மிகவும் எளிதாகக் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
5. சீரமைக்கப்பட்ட பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்படி, இயற்கைச் சீற்றத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு சந்தை நிலவரப்படி இழப்பீடு வழங்கப்படும்.

31. தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் வளத்தை பெருக்கும் நோக்குடன் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

32. மேகதாது அணை திட்டத்தை தடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன், மத்திய அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தங்களும் தரப்படும்.

33. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

34. ஊழலை ஒழிப்பதற்காக 12 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் அதன் தலைமை அதிகாரி ஊழல் ஒழிப்பு அதிகாரியாக அறிவிக்கப்பட்டு, அவரிடம் ஊழல் ஒழிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஏதேனும் துறையில் ஊழல் நடந்தால் அதற்கு அதன் தலைமை அதிகாரியே பொறுப்பாவார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

35. ஊழலை ஒழிப்பதற்கான இன்னொரு முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:

- லோக் அயுக்தா தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும்.
- முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் லோக்அயுக்தா வரம்பிற்குள் கொண்டுவரப்படுவர்.
- ஊழல் வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும்.
- ஊழல் அதிகாரிக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை விதிக்கப்படுவதுடன், அவரது ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பும் அவரிடமிருந்து வசூலிக்கப்படும்.

36. பொதுமக்களுக்கு அனைத்து வகையான அரசு சேவைகளும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன் பொதுச் சேவைபெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+