மெரீனா கடலில் படகு விடுவோம்.. ஒரு சொட்டு மது கூட இல்லாத மாநிலமாக்குவோம்.. இது பாமகவின் நிழல் பட்ஜெட
சென்னை: பாமக சார்பில் இன்று தமிழக அரசுக்கான 2016-17ம் ஆண்டுக்கான நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதை வெளியிட்டார்.
பாமக ஆண்டுதோறும் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நிழல் பட்ஜெட் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார்.
மின்கட்டணம், பஸ் கட்டணம் குறைப்பு, 1 கோடி பேருக்கு வேலை, முழு மதுவிலக்கு, ஊழல் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை, உள்ளிட்ட 100 அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
1. 2016-17 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.2,76,943.16 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டில் மொத்த வருவாயை விட ரூ.1.04,462.78 கோடி அதிகம் ஆகும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமும், வணிக வரி வசூலை மேம்படுத்துவதன் மூலமும் ரூ.92,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட திட்டம் வகுத்திருப்பதன் மூலமும் தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.2,80,468 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.2,42,356 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.42,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் அடைக்கப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிகமிக குறைந்த அளவிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படும்.
3. 2016-17 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.34,587.16 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.3524.86 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.
4. தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களுக்கு ரூ.16,380 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.1,875.56 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.
5. கல்விக் கடன் பெற்று உயர் கல்வி கற்ற மாணவர்களில் வேலைகிடைக்காதவர்களின் விவரத்தைத் திரட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களின் கடன்களையும் அரசே செலுத்தும். இந்த பணிகள் நடப்பாண்டின் இறுதிக்குள் நிறைவடையும்.
6. தமிழ்நாட்டில் மின் கட்டணம் 10% குறைக்கப்படும். இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப் படும். இதனால் மின்கட்டணம் மேலும் 25% குறையும்.
7. தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 5 பைசாவும், சொகுசு பேருந்துகள் மற்றும் குளிரூட்டி வசதி கொண்ட பேருந்துகளில் 8 பைசாவும் கட்டணம் குறைக்கப்படும். தமிழக வரலாற்றில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
8. சென்னையில் மாநகரப் பேரூந்துகளின் எண்ணிக்கை 2016&17 ஆம் ஆண்டில் 4,000ஆக உயர்த்தப்படும். 2017&18 ஆம் ஆண்டில் 5,000ஆக உயர்த்தப்படும். சென்னை மாநகரப் பேருந்துகளில், இந்திய விடுதலை நாளான வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் கட்டணமில்லாப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அன்று முதல் மாநகரப் பேருந்துகளில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
9. மத்திய அரசுடன் பேசி தணிக்கை செய்வதன் மூலம் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக்கட்டணங்கள் முறைப்படுத்தப்படும். முதலீடு ஈட்டப்பட்ட சுங்கச் சாவடிகளில் 40% மட்டுமே பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
10.தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ&க்கு இணையான பாடத்திட்டம் 2017&18 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். இப்பாடத்திட்டத்தை தயாரிக்க கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும்.
11. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 10 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 500 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.
12. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.30,000 செலவிடப்படும்.
13. பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.45,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
14. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
15. பள்ளிகளில் திறன் சார் கல்வி, அறிவுசார் கல்விமுறை , தொழில்கல்வி ஆகிய கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11&ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.
16. மாணவர்கள் பள்ளிகளுக்கு எளிதாகச் சென்றுவர வசதியாக, "மாணவர்கள் மட்டும்" பேருந்துகள் இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications