ஒரு சொட்டு மது கூட இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகும்!
89. தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றவுடன் மதுவிற்பனை 2 மணிநேரம் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதுபோதுமானதல்ல என்பதால், இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
90. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது, பீர் ஆலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் இரத்து செய்யப்பட்டு, மது ஆலைகள் மூடப்படும். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட உற்பத்தி செய்யப்படவில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.
91. கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், குடிநோயர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

92. அனைத்து மக்களின் பெயர் விவரம், வயது உள்ளிட்ட தகவல்கள் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் அரசே தானாக நிதியுதவி வழங்கும். இதற்காக, எவரும் விண்ணப்பிக்க வேண்டிய தேவை இல்லை
93. இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வரையறுக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
94. தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் அனைத்து வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும்.
மாற்றுத்திறனாளிகள் நலன்
95. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
96. கன்னியாகுமரி மாவட்டம் பசுமைச் சுற்றுலாத்தளமாக அறிவிக்கப்படும்.
97. தமிழ்நாட்டில் மத்திய அரசு அமைத்த 12 ஸ்மார்ட் நகரங்களை (Smart City) விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
98. நகரங்களில் பேருந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வை-ஃபை (Wi-fi) வசதி செய்துத்தரப்படும்.
99. நகர்ப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுமனைகளின் விலையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
100. பெண்களுக்கான திருமண வயதை 21-ஆக உயர்த்தும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications