திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது - ஜெ.குரு கடும் தாக்கு
சென்னை: 50 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சியில் ஊழலில் திளைத்து தமிழகம் சீரழிந்துவிட்டது என்று வன்னியர் சங்கத் தலைவர் எம்.எல்.ஏ குரு வண்டலூர் மாநாட்டில் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள விஜிபி திடலில் பாமக மாநில மாநாடு இன்று நடக்கிறது. ‘ஆட்சி மாற்றத்துக்கான பாமக மாநில மாநாடு' என்ற தலைப்பில் நடக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவரும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் எம்.எல்.ஏ குரு பேசியதாவது: தமிழகத்தில் திராவிட கட்சிகள் வீழும் காலம் வந்துவிட்டது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்தை சுரண்டி ஊழலில் திளைத்துள்ளனர். வீராணம் ஊழல், ஸ்பெக்ரம் ஊழல் என ஊழலை ஊக்குவித்ததே கருணாநிதி தான். அதேபோல் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதுதான் ஜெயலலிதாவின் வரலாறு.
மதுவை கொடுத்து மக்களை பிச்சக்காரனாக மாற்றியது திமுக. அப்படிப்பட்ட திமுகவிற்கு தேர்தலில் நிற்க என்ன தகுதி இருக்கிறது. இனி தேர்தலில் நிற்கமாட்டோம் என்று சொன்னால் கருணாநிதி சரியான தலைவர், மக்களை நேசிக்கும் தலைவர் என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி எந்த பதவியையும் வகிக்கவில்லை. அதேபோல் சட்டமன்ற, நாடாளுமன்ற பதவிகள் வேண்டாம் என கூறியவர் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். வறுமையை ஒழிப்பதாக சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை எந்த முயற்ச்சியையும் எடுக்க வில்லை.
மாறாக மதுவை மட்டுமே ஊக்குவித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. ஆளும் அதிமுக இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை கெடுத்துவிட்டார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா இலவச மிக்சி, இலவச கிரைண்டர், இலவச ஆடு, மாடுகளை கொடுத்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் பன்னிக் குட்டிகளை கொடுப்பார்கள். அதை வைத்து கொண்டு மக்களின் வாழ்க்கை தரம் எப்படி உயரும்.
ஆனால் பாமக ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை ஒழித்து கல்வியை ஊக்குவிப்போம், வேலைவாய்ப்பை பெருக்குவோம், நீர் ஆதாரத்தை பெறுக்குவோம், அப்படி சொன்னதை செய்யவில்லை என்றால் பாமக பதவி விலகவும் தயாராக இருக்கிறது என்று கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications