ஃபர்ஹானா முஸ்லிம்களுக்கு எதிரான படமா? கேரளா ஸ்டோரியோடு ஒப்பிடாதீங்க! மனுஷ்ய புத்திரன் விளக்கம்
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நாளை வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று அப்படத்திற்கு வசனங்களை எழுதிய கவிஞர் மனுஷ்ய புத்திரன் விளக்கம் அளித்து இருக்கிறார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், "மே 12 வெளியாகும் ஃபர்ஹானா படத்தின் சிறப்புக் காட்சி படக்குழுவினருக்கு இன்று திரையிடப்பட்டது. தியேட்டர் வாசலில் ஐஸ்வர்யா ராஜேஷிடம் படத்தில் எனது வசனங்களுக்கும் அவரது நடிப்புக்கும் இடையே நடந்த பெரும்போட்டியைப் பற்றி கூறினேன். மிகவும் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

ஃபர்ஹானா இஸ்லாமிய கலாச்சாரப் பின்புலத்தை மிக மிக கண்ணியமாக காட்டும் படம் என்பதை வெள்ளிக்கிழமை எல்லோரும் உணர்ந்துகொள்வார்கள். கேரளா ஸ்டோரீஸ் போன்ற மோசமான நோக்கம் உடைய படத்தோடு ஃபர்ஹானாவை இணைத்து பேசுவது தவறான புரிதலின் அடிப்படையில் எழுந்த ஒரு விபத்து.
நம் எதிர்ப்புகள் எதிர்க்கப்பட வேண்டியவற்றின் மேல்மட்டும்தான் இருக்க வேண்டும். இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் திருவல்லிக்கேணி இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை ஒரு அழகிய சித்திரமாக்கியிருக்கிறார். எல்லாவற்றையும்விட மகளிர் மேம்பாடு குறித்த ஒரு வலுவான படைப்பாக இப்படம் உருவாகியிருக்கிறது.
இஸ்லாமிய மக்களை புரிதலற்ற முரடர்களாக காட்டும் ஸ்டீரியோ டைப் படங்களுக்கு நடுவே அவர்கள் வாழ்வியலில் நிறைந்திருக்கும் அன்பும் நெகிழ்வுத்தன்மையும் அழகாக சித்தரிக்கப்படும் இந்தப் படத்தை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள்மேல் தப்பெண்ணம்கொண்ட அனைவரும் காணவேண்டும்." என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கிடையே அந்த படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு இதுகுறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், "எங்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது ஃபர்ஹானா திரைப்படத்தை வரும் மே 12ஆம் தேதி அன்று, ரசிகர்கள் பார்வைக்கு திரையரங்குகளில் வெளியிட உள்ளது.
தொடர்ந்து மக்களை மகிழ்விக்கக்கூடிய, சிந்திக்கத் தூண்டும் சிறப்பான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்கள் நிறுவனம் மிகுந்த சமுக பொறுப்புகளை கொண்டே என்றும் செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது.
ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும் உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. மேலும் மனித குலத்திற்கு எதிரான ஒரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை.
இதை எங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி. கலைப் படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல.

அது அவ்வாறு எதிர்பவர்களையே சரியான புரிதலற்றவர்களாகவே காட்டும். பல நூறு பேரின் கடுமையான உழைப்பில் தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. நோக்கத்தில் பழுதில்லா ஒரு திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்தப் படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம்.
குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம், எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீடுக்குத் தயாராகிவிட்டது.
இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே ஃபர்ஹானா திரைப்படம் குறித்து புரிந்து கொள்ளாத நண்பர்கள் இந்த விளக்கத்தை நல்லமுறையில் ஏற்று, தோழமையுடன் ஒத்துழைப்பை வழங்கிடப் பணிவன்புடன் கோருகிறோம்." என்று தெரிவித்து உள்ளார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications