ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் ஆய்வு மையம்- ஜெ. உதவ கவிஞர் முத்துலிங்கம் வேண்டுகோள்
சென்னை: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு மையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என்று கவிஞர் முத்துலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற மலர் வெளியீட்டு விழாவில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் பேசியதாவது:
தமிழ் தமிழ் என்று சொல்லித் தமிழால் வளர்ந்தவர்கள் தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான செயல்கள் எதையும் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். ஒருவர்தான் தமிழை வளர்ப்பதற்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை தஞ்சையில் தோற்றுவித்தார்.

உலகில் புகழ் பெற்ற பல்கலைக்கழகம் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம். உலகின் சிறந்த மொழிகளுக்கெல்லாம் ஆய்வு மையம் அங்கே அமைக்கப்பட்டிருக்கிறது.
உலகில் மிகச் சிறந்த மொழியாகவும், உலகில் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் முதல் மொழியாகவும் செம்மொழிக்குரிய பதினோரு தகுதிகளையும் பெற்ற மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழிக்கு அங்கே இருக்கை அமைக்கப்படவில்லை.
ஆய்வு மையம் அங்கே அமைக்க வேண்டுமென்றால் இந்திய ரூபாயில் 40 கோடி நாம் செலுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் ரூ 7 கோடி திரட்டி இருக்கிறார்கள். இன்னும் 33 கோடி ரூபாய் கொடுத்தால் தமிழ் இருக்கை அங்கே அமைந்து விடும்.
எம்.ஜி.ஆர். இன்று இருந்திருந்தால் அரசின் சார்பில் ரூ 33 கோடியையும் கொடுத்துத் தமிழுக்குப் பெருமை தேடி தந்திருப்பார். அவர் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் கவனத்திற்கு யாரேனும் இதைக் கொண்டு சென்றால் நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications