வைரமுத்து சார்.. உங்களுக்கு பேத்தி வயசு இருக்கும் பொண்ணு நந்தினி.. செல்ல சீண்டலில் நெட்டிசன்ஸ்
சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினியை பாராட்டி தங்கப் பேனாவை நேரில் சென்று பரிசளித்த கவிஞர் வைரமுத்து, இதுதொடர்பாக வெளியிட்ட பதிவில் இடம்பெற்ற ஒரு வார்த்தையை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
கடந்த மே 8 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டது. இந்த தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு நந்தினி என்ற திண்டுக்கலை சேர்ந்த மாணவி 600 க்கும் 600 மதிப்பெண்களை எடுத்து சாதித்தார். மாணவி நந்தினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவும் அவரை பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது

எப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்
திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்
உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே!" என குறிப்பிட்டு இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக திண்டுக்கலுக்கு சென்ற கவிஞர் வைரமுத்து நந்தினிக்கு தனது தங்கப் பேனாவை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நெட்டிசன்கள் அவர் வெளியிட்ட பதிவை கையில் எடுத்து கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதற்கு காரணம் அதில் இடம்பெற்ற "தங்கை" என்ற வார்த்தை.
69 வயதாகும் வைரமுத்து, 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து இருக்கும் நந்தினியை எப்படி தங்கை என்று சொல்லலாம். நந்தினிக்கு வைரமுத்துவின் பேத்தி வயதாகிறது என்ற பதிவுகளை ட்விட்டரில் கான முடிகிறது. வைரமுத்து தங்கை என்பதற்கு பதிலாக பேத்தி என்று திருத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகள் முழு மதிப்பெண்களை பெற்றது இல்லை. இந்த சாதனைகளை முறியடித்த மாணவி நந்தினி என்ற மாணவி தமிழ், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று 600 க்கு 600 என முழு மதிப்பெண்களையும் பெற்று வரலாற்று சாதனையை படைத்தார்.
சாதாரண தச்சுத் தொழிலாளியின் மகளான நந்தினி பெற்ற இந்த மதிப்பெண் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு வரலாற்றிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாணவி நந்தினி, "நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். என்னால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்து நான் கவலைப்படவில்லை. என் பெற்றோர் நமக்கு கல்விதான் சொத்து என்னிடம் சொல்லி வளர்த்தனர்.
நானும் இடைவிடாமல் அதை கடைபிடித்தேன். அதன் பயனாகவே இத்தனை மதிப்பெண்களை என்னால் பெற முடிந்தது. நம்பிக்கையோடு முயன்றால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய விருப்பம் ஆடிட்டராக வேண்டும் என்பதே. சிஏ தேர்வுக்காக பயிற்சி எடுக்க இருக்கிறேன். அதற்கு தேவையான மேற்படிப்புகளை படிக்க உள்ளேன்." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications