கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி- தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டல் ஊழியர்கள் 3 பேர் கைது!
சென்னை: சென்னை துரைப்பாக்கம் அருகே காரப்பக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷவாயு தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்த திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டல் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகரான துரைப்பாக்கத்தை அடுத்த காரப்பக்கத்தில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இதில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக குமார், சரவணன், வேல்முருகன் ஆகியோர் அழைத்துவரப்பட்டனர்.
முதலில் குமார் என்ற தொழிலாளி கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். ஆனால் அவர் நீண்டநேரமாக வெளியே வராததால் சரவணன், வேல்முருகன் ஆகியோர் அடுத்தடுத்து உள்ளே இறங்கினர். பின்னர் ராஜேஸ் என்ற ஹோட்டல் ஊழியரும் உள்ளே இறங்கினார்.
இவர்கள் 4 பேரும் நீண்டநேரமாக வெளியே வராததால் ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கழிவுநீர் தொட்டியில் உள்ளே இறங்கிய 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேரும் விஷவாயு தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதில் பலியான சரவணனுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றிருந்தது. இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே 4 தொழிலாளர்கள் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் சென்னையில் போராட்டங்களையும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டல் ஊழியர்கள் நவீன், சரவணன், தினகரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications