சுண்டைக்காய் என நினைத்து விஷ காய் சாம்பார்.. அறியாமல் சாப்பிட்ட 2 பேர் பலி
கோவை: கோவை மாவட்டத்தில் சுண்டைக்காய் என நினைத்து விஷக்காயில் சமையல் செய்து சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணியில் நடைபெற்று வருகிறது. அங்கு வேலை செய்வதற்காக திருச்சி மாவட்டம், மணப்பாறை பாத்திமாபுதுார் பகுதியை சேர்ந்த, பலர் ஒரு குழுவாக சென்றுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் நரசீபுரத்தில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் நரசீபுரம் அருகே உள்ள மடக்காட்டில் தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 8-ந் தேதி வேலையை முடிந்துவிட்டு வந்த சிலர், அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து சுண்டைக்காய் போன்ற ஒருவித காயை பறித்து வந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சந்தானம் (60), பழனிசாமி (45), பொன்னான் (57), முத்துசாமி (70), பெரியசாமி (55), வேல்முருகன் (45), யாகப்பன் (40) ஆகிய ஏழு பேருக்கு திடீர் வாந்தி-பேதி ஏற்பட்டு திடீரென மயக்கமடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானம், பழனிச்சாமி ஆகிய 2 பேர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தனர். மற்ற அனைவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications