சென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆசிட் ஊற்றி தீ வைத்தவர் கைது
சென்னை மடிப்பாக்கத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு ஆசிட் ஊற்றி தீ வைத்து எரித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் காயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராஜா என்பதாகும். இவர் மடிப்பாக்கத்தில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் பணி செய்து வந்த ஊழியர் யமுனாவிற்கு பாலியல் தொல்லை கொடுப்பாராம்.

ராஜாவின் செயல்பாடுகளை யமுனா எதிர்த்துள்ளார். இந்தநிலையில் யமுனா மீது இன்று ஆசிட் ஊற்றி தீ வைத்த ராஜா, தப்பி ஓடினார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரத்த பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர். ஆசிட் வீச்சின் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யமுனாவிற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் விநோதினி, சென்னை வித்யா என ஓரு தலைக்காதலால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்த பின்னர் ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் பெண் ஒருவர் ஆசிட் வீசி எரிக்கப்பட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications