திருச்சி பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: ஜெ. அறிவிப்பு
திருச்சி: திருச்சியில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அரசு விரைவுப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு கிளம்பியது. பேருந்து இரவு 9.25 மணிக்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே இருக்கும் இருங்களூர் பகுதில் செல்கையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகளில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.
இந்த விபத்திற்கு அரசுப் பேருந்து டிரைவரின் கவனக்குறைவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் பேருந்தின் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிவாரணம்:
திருச்சி விபத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications