முதல்வர் எடப்பாடி பற்றி பேஸ்புக்கில் விமர்சனம்... நாகை வாலிபர் அதிரடி கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: முதல்வரை பற்றி அவதூறு கிளம்பிய விவகாரத்தில் நாகப்பட்டினம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மங்கை மடத்தில் இண்டெர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

Police arrested a man who writes defamatory comments about TN CM !

இந்த நிலையில் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் குறித்து பேஸ் புக்கில் விமர்சித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் சென்றது.

இதைதொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் , நாராயணபுரத்துக்கு வந்து வாலிபர் சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பேஸ்புக், இன்டர்நெட் உபயோகிப்பவர்களுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக போலீசார் இதன் பின்னனியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu police has arrested a man who writes defamatory comments about TN CM. They took him to Chennai for further investigation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற