டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட கடையநல்லூர் எம்எல்ஏ உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
செங்கோட்டை: பொதுமக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர்-பண்பொழி சாலையில் தனியார் பள்ளி, மசூதி ஆகியவை அமைந்துள்ள பகுதியில் மாநில சாலையை ஒட்டிய பகுதியில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தக்கடை அமைக்கும் போதே இதற்கு இந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அதற்கு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் இருக்கும் டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக கடையநல்லூர்-பண்பொழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் தலைமையில் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அரசு டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட்ட சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் உள்ளிட்ட 25 பேர் மீது கடையநல்லூர் போலீசில் டாஸ்மாக் கடை ஊழியர் அபூபக்கர் பாதுஷா புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications