"கூடுவாஞ்சேரி சாந்தியை போனில் மிரட்டினார் எஸ்.வி.சேகர்"... போலீஸில் புகார்

Subscribe to Oneindia Tamil

Police complaint against S V Sekhar
சென்னை: இந்து மகாசபா மாநில மகளிர் அணிச் செயலாளரான கூடுவாஞ்சேரி சாந்தி என்பவரை போனில் கொலை மிரட்டல் விடுத்தார் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் என்று போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து மகா சபா தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர் கூறுகையில், மகாபாரதத்தில் மங்காத்தா என்ற தலைப்பில் எஸ்.சி.சேகர் நாடகம் அரங்கேற்றி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்தோம். இதனால் அந்த நாடகத்தை வேறு இடங்களில் போடுவதை எஸ்.வி.சேகர் நிறுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் மகாபாரதத்தில் மங்காத்தா என்ற நாடகத்தை மீண்டும் போட்டுள்ளார். மேலும் இந்து மகா சபா மகளிர் அணி மாநிலச் செயலாளர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சாந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

எங்கள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், மகாபாரதத்தில் மங்காத்தா என்ற தலைப்பில் நாடகம் போட்டு இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி வரும் எஸ்.வி.சேகர் மீது கீழ்பாக்கம், தி.நகர், வளசரவாக்கம், அண்ணா நகர், ஆவடி, விருகம்பாக்கம் உள்பட 16 காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+