10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியார் தலைமறைவு! 5 மாத சிசு தோண்டி எடுப்பு!

நெல்லை அருகே பேட்டையில் உள்ள சர்ச்சில் இருப்பவர் பாதரியார் செல்வன். கடந்த 2010ல் இவர் அங்கு பணிக்கு வந்தார். அந்த நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின் மகள் 10ம் வகுப்பு படித்து வந்தார். 15 வயதுடைய அந்த மாணவி, பாதிரியாரிடம் பாட்டு பயின்று வந்தாள். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் சொல்லிய பாதிரியார், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமுற்றார்.
சில தினங்களில் மாணவியின் உடலில் மாற்றம் ஏற்படுவதை கண்ட அவரது தாய் விசாரித்துள்ளார். பாதிரியார்தான் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியிருக்கிறார்.
உடனே பெற்றோர்கள் பாதிரியாரிடம் விஷயத்தை சொல்லி முறையிட்ட போது அவர்களை சரிகட்டிய பாதிரியார் கருகலைப்பு செய்வதற்காக பணம் கொடுத்துள்ளார்.
பின்னர் தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் 5 மாத கருவை கலைக்க செய்து, அந்த சிசுவை கல்லறையில் உள்ள தோட்டத்திலேயே புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர அவர்கள் பிரச்சனையை கிளப்பியபோது தகவல் போலீசார் வரை சென்றது.
மாணவியின் பெற்றோரிடம் போலீஸ் விசாரித்தது. அவர்களிடம் புகார் வாங்கியது போலீஸ். அதன் அடிப்படையில் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விமலா, பாதிரியார் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து பாதிரியார் தலைமறைவானார். மேலும் அந்த சிசுவை தோண்டி எடுப்பதற்கு அதிகாரிகள் உதவியோடு வெள்ளிக்கிழமை காலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசு மருத்துவர் செல்வமுருகன், தாசில்தார் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் சர்ச்சின் கல்லறை தோட்டத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் தோண்டப்பட்டது. ஒன்றரை அடி ஆழத்திற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் சில சதை துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அங்கேயே சோதனை செய்த டாக்டர், டிஎன்ஏ சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதுதொடர்பாக பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் பெண் ஆய்வாளர் விமலா ஆகியோர்தலைமறைவான பாதிரியாதை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications