தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது: தேர்தல் டிஜிபி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று நடந்த லோக்சபா மற்றும் ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கான தேர்தல்கள் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக தேர்தல் டிஜிபி அனுப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. சில தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து தேர்தல் டிஜிபி அனுப் ஜெய்ஸ்வால் சென்னையில் வைத்து கூறுகையில், ‘இன்றைய தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. காவல்துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரிய மோதல்கள் தவிர்க்கப்பட்டன' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications