நேரம் கடந்து பிரச்சாரம்-கிருஷ்ணசாமி மீது வழக்கு: அனுமதியில்லா பிரசாரம்- ராமராஜன் மீதும் வழக்கு

Subscribe to Oneindia Tamil

தென்காசி: ஆர்வத்தில் அளவுக்கு அதிகமான நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தென்காசி தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அங்கு போட்டியிடுகிறார்.

Police file case against Dr. Krishnasamy

புதன்கிழமை இரவு தென்காசி தொகுதிக்கு உட்பட்ட செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் வாக்கு சேகரித்துள்ளார். ஆனால் பிரச்சார ஆர்வத்தில் கைக்கடிகாரத்தை பார்க்க மறந்துவிட்டார் கிருஷ்ணசாமி. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இரவு 10 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்க கூடாது.

ஆனால் கிருஷ்ணசாமி 10 மணிக்கு மேலும் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் கிருஷ்ணசாமி, திமுக நிர்வாகிகளான தனுஷ்கோடி, தங்கவாண்டியன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ராமராஜ் ஆகியோர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தளவாய்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராமராஜன் மீதும் வழக்கு:

அதேபோல நடிகர் ராமராஜன் மீதும் சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திருவள்ளூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பொன்னேரியில் ராமராஜன் பிரச்சாரம் செய்தார். அவர் வாக்கு சேகரித்த இடங்களில் கோளூர், மெதூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அவர் முன் அனுமதி பெறவில்லை.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திருப்பாலைவனம் அளித்த புகாரை தொடர்ந்து அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததாக ராமராஜன், அதிமுக நிர்வாகிகள் மோகன வடிவேல், குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+