ரியல் எஸ்டேட் தகராறால் ஓசூர் சர்வேயர் எரித்துக் கொலையா...?
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வேயர் குவளைச் செழியன் காரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகே தீக்காயத்துடன் சிக்கிய நபருக்கு பலத்த பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கலைவாணன் என்ற பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பதால் இந்தக் கொலை வழக்கில் அவருக்கு முக்கியத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஓசூர், ராயக்கோட்டை சாலையில் உள்ள திரிவேணி கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் குவளை செழியன் (42). இவர் ஓசூர் நகராட்சியில் சர்வேயராக இருந்து வந்தார். கடந்த 26ம் தேதி குவளை செழியன், தனது சொகுசு காரில் வெளியே புறப்பட்டார். ஆனால் திரும்பி வரவில்லை.

அன்று மாலை அவர் தனது மனைவி ரேவதிக்குப் போன் செய்தார். அதில், என்னை ஒரு கும்பல் கடத்தியுள்ளது. அவர்களுக்கு ஐம்பது லட்சம் பணம் கொடுக்கவேண்டும், நீ பணத்தை தயார் செய்து வை என்று தகவல் கூறியுள்ளார். இதனால் மனைவி ரேவதி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு காலையில் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் பகுதியிலுள்ள வேப்படியாறு சாலையோரம் தீ வைக்கப்பட்ட காருக்குள் உடல் துண்டு துண்டான நிலையில், பாதி எரிந்த நிலையில் குவளை செழியன் கொலையாகிக் கிடந்தார்.
அந்தப் பகுதி மக்கள் காரைச் சூழ்ந்து பார்த்தபோது உள்ளே கிடந்த உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடத்திற்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் தீக்காயத்துடன் ஒரு நபர் கிடப்பதையும் பார்த்தனர். அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. போலீஸார் தகவல் கிடைத்து வந்து குவளை செழியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்த நபரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த நபர், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் சக்திவேல் (36) எனத் தெரியவந்தது. சக்திவேல் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சக்திவேல் கலைவாணன் என்ற பெயரை தொடர்ந்து கூறி வருகிறார். அவர் இந்தக் கொலை செய்த நபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கலைவாணன் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவருக்கும், குவளை செழியனுக்கும் புரோக்கர் போல செயல்பட்டு வந்துள்ளார் சக்திவேல். குவளை செழியன் விவகாரத்தில் கலைவாணனுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications