நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு

நெல்லை எக்ஸ்பிரசுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அதற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடு்க்கப்பட்டதால் அதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பீர் மைதீன். இவர் நெல்லை ரயில்வே நிலைய கண்காணிப்பாளுக்கு பதிவு தபால் அனுப்பியிருந்தார். அதில் தனது சொத்து பிரச்சனையை குறிப்பிட்டு தனது உறவினர்கள் சிலர் ஊருக்கு வருகின்றனர். அதனால் அந்த ரயிலை தகர்க்க சிலர் சதி செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

Police has increase protection for Nellai express

மேலும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏகே 47 துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ரயில்வே அதிகாரி புகாரின் பேரில் நெல்லை போலீசார் விரைந்து செல்பட்டு பீர் மைதீனை உடனடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து சென்னை மற்றும் திருச்சி அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து சென்னையிலிருநது நெல்லைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயிலுககும், நெல்லையிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர்.

பொதுவாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பாக மூ்ன்று போலீசார் மட்டுமே செல்வது வழக்கம். ஆனால் மாலை முதல் 10 பேர் பாதுகாப்புகாக சென்றனர். ரயில்வே பாதுகாப்பு படையினரும் தங்கள் பங்கிற்கு கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நெலலைக்கு வந்து சேர்ந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+