வெவ்வேறு ஊர்களில் கொல்லப்பட்ட 2 சென்னை இளைஞர்கள் .. தீவிரமடையும் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மாதவரம் அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் அசோக்.

திருமணமான இவர் கொடுங்கையூர் ஜம்புலிங்கம் நகரில் மனைவியுடன் வசித்து வந்தார். இவரது நண்பர் சுரேஷ் ஒரு ஆட்டோ டிரைவர்.

காணமல் போன நண்பர்கள்:

கடந்த மாதம் காணமல் போன இருவரில் சுரேஷ் செஞ்சியை அடுத்த வல்லம் மருதேரி ஏரிக்கரையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

தனித்தனியாக கொலை:

இதே நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தர மேரூர் அருகே அசோக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். ஒன்றாக சென்றவர்கள் தனித்தனியாக வெவ்வேறு ஊர்களில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது போலீசாரை குழப்பமடைய செய்து உள்ளது.

போலீசார் சந்தேகம்:

அசோக் மீது கொடுங்கையூரில் ஆட்டோ பாட்ஷா என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. இது தொடர்பான முன் விரோதத்தில் அசோக் கடத்தப்பட்டு தீர்த்து கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் அப்போது உடன் இருந்த சுரேசும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பழி வாங்கும் எண்ணமா?:

அதே நேரத்தில் சுரேசுக்கும் பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்தது. அதில் அவர் பழி வாங்கப்பட்டாரா என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

தீவிர விசாரணை:

சுரேஷ் கொலை தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அசோக் கொலை தொடர்பாக உத்திர மேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 தனிப்படைகள்:

கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+